தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி லண்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
15 ஆம் திகதி லண்டனில் நடைபெறும் கூட்டமொன்றில் உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், பிரிட்டனின் முக்கிய சில அரசியல் பிரமுகர்களையும் இவ்விஜயத்தின்போது அநுர சந்தித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.