குவைத்தில் தீ விபத்து:41 பேர் பலி!

குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவைத்தின் தெற்கில் உள்ள மங்காப் (Mangaf) மாவட்டத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அதிகளவில் வௌிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்திலேயே தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (12) அதிகாலை பரவிய தீயில் பலர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளதுடன், தீ பரவியமைக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த கட்டடத்தில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்துள்ளதுடன், அவர்களில் பலர் மீட்கப்பட்டுள்ளனர். புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி பலர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் அடங்குவதாக தகவல் வௌியாகியுள்ளது.

தீ விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிட்ட துணை பிரதமர் Sheikh Fahad al-Yousuf al-Sabah, கட்டட உரிமையாளரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles