ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் ஜேர்மனியில் ஆரம்பம்

64 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றை கொண்டதும், கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்திற்கு அடுத்தபடியாக கால்பந்தாட்ட இரசிகர்களால் பெரிதும் பார்த்து மகிழப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டியான யூரோ 2024 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் ஜுன் 14 முதல் ஜுலை 14 வரை ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.
யூரோ கிண்ணத்தில் ஐரோப்பிய கண்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை களமிறங்கி தத்துமது ஆற்றல்களை வெளிப்படுத்துகின்றதுடன் தாங்களே ஐரோப்பாவின் கால்பந்தாட்ட ஜாம்பவான்கள் என்பதை அதன்மூலம் பறைசாற்றுவர்.
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தின் முதலாவது பொதுச் செயலாளரான ஹென்ரி டெலானேவினால் 1920 ஆம் ஆண்டு ஐரோப்பிய அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டிகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன் அதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது.
ஆனாலும் 40 ஆண்டுகளுக்கு பின்னர், அதாவது 1960 ஆம் ஆண்டே யூரோ கிண்ணமானது பிரான்ஸில் தனது முதலாவது அத்தியாயத்தை நடத்தியது. இருந்தபோதிலும் இப்போட்டிகளை நடத்த வேண்டும் என்ற மாபெரும் யோசனையை முன்வைத்த ஹென்ரி டெலானே 1955 ஆம் ஆண்டு காலமானபோதிலும், அவரது கனவு நனவாகி கோடிக்கணக்கான இரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி மகிழ்ச்சி தருகின்றது.
இதற்கு முன்னர் 16 தடவைகள் யூரோ கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண கிண்ணத்தை யுகொஸ்லாவேக்கியாவை வீழ்த்தி சோவியத் யூனியன் கைப்பற்றியது.
இதுவரை ஜேர்மனி 3 தடவையும் (1972,1980,1996) ஸ்பெயின் 3 தடவையும் ( 1964,2008,2012), இத்தாலி 2 தடவையும் (1968, 2020) பிரானஸ் 2 தடவையும் (1984,2000) சோவியுத் யூனியன், செக்கஸ்லோவாக்கியா, நெதர்லாந்து. டென்மார்க், கிறிஸ், போர்த்துக்கல் ஆகிய அணிகள் தலா ஒரு தடவையும் கிண்ணத்தை வென்றெடுத்துள்ளன.
1960 முதல் 1976 ஆம் ஆண்டு வரையான ஐந்து அத்தியாயங்களில் நான்கு அணிகளும், 1980 முதல் 1992 வரையான நான்கு அத்தியாயங்களில் எட்டு அணிகளும், 1996 முதல் 2012 வரை ஐந்து அத்தியாயங்களில் 16 அணிகளும் பற்றுபற்றின. 2016 முதல் இம்முறை வரையான அனைத்து அத்தியாயங்களிலும் மொத்தமாக 24 அணிகள் களமிறங்குகின்றன.
ஒவ்வொரு நான்கு வருடத்திற்கும் ஒரு முறை நடைபெற்ற போட்டிகள் 2020 ஆம் ஆண்டு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும் கொவிட் காரணமாக அது 2021 ஆம் ஆண்டே நடைபெற்றது.
ஜேர்மனியில் 10 மைதானங்களில் நடைபெறவுள்ள இம்முறை போட்டிகளில் ஜேர்மனி, ஸ்கொட்லாந்து, ஹங்கேரி, சுவிற்சர்லாந்து ஏ குழுவிலும், ஸ்பெயின், குரேஷியா, இத்தாலி, அல்பேனியா பி குழுவிலும், ஸ்லோவேனியா, டென்மார்க், சேர்பியா, இங்கிலாந்து சி குழுவிலும், போலந்து, தெதர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ் டி குழுவிலும், பெல்ஜியம், ஸ்லோவாக்கியா, ருமேனியா, உக்ரெயன் ஈ குழுவிலும், துருக்கி, ஜோர்ஜியா, போர்த்துக்கல், செக்குடியரசு எப் குழுவிலும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பெறும் 12 அணிகளும், ஒட்டுமொத்த குழுக்களின் அடிப்படையில் 3ம் இடத்திற்கான சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய 4 அணிகளும் சுப்பர் 16 இற்கு தகுதிபெறும். சுப்பர் 16 சுற்றில் நொக் அவுட் முறையில் ஆட்டங்கள் ஆரம்பமாகும் என்பதுடன் வெற்றிபெறும் 8 அணிகள் கால் இறுதிக்கு தகுதிபெறும். 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும் என்பதுடன், இரண்டு அணிகள் மாபெரும் இறுதிப் போட்டிகக்கு தகுதிபெறும்.
நடப்புச் சம்பியனாக இத்தாலி உள்ளதுடன் இம்முறை ஐரோப்பிய கிண்ணத்தை வெல்வதற்கு அனைத்து அணிகளும் கடுமையான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகி;ன்றது. கால்பந்தாட்ட தரவரிசையில் முன்னிலையிலுள்ள ஏனைய அணிகளும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு சில சிரேஷ்ட வீரர்களின் கடைசி கால்பந்தாட்ட தொடராக இது இருக்கும் என்பதால் அவர்கள் கி;ண்ணத்தை வென்று தமது நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. ஒரு மாதம் முழுவதும் நடைபெறவுள்ள இப்போட்டிகள் நிச்சயம் கால்பந்தாட்ட இரசிகர்களை தமது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் என்பதிலும் எவ்வித மாற்றும் கருத்தும் கிடையாது.
சுரேஸ் குமார் பேனா
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles