கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தல்

T20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பங்களாதேஷ் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணியின் தலைவர் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் 41 ஓட்டங்கள் அடித்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.கம்மின்ஸ் இந்த 3 விக்கெட்டுகளையும் ஹாட்ரிக் முறையில் வீழ்த்தி அசத்தினார்.

அதாவது 18-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளில் மக்மதுல்லா மற்றும் மெஹதி ஹசன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து கடைசி ஓவரை வீசிய அவர், அந்த ஓவரின் முதல் பந்தில் தவ்ஹித் ஹ்ரிடோயின் விக்கெட்டை கைபற்றினார். இது ஹாட்ரிக் விக்கெட்டாக பதிவானது.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 4-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் டி20 உலகக்கோப்பைகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

Related Articles

Latest Articles