நுவரெலியாவிலிருந்து வெளிமடை பகுதியை நோக்கி பயணித்த டெக்டர் கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரேந்தபொல பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (22) மாலை இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் டெக்டரை செலுத்தி சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்கு உள்ளான டெக்டர் நுவரெலியா பகுதியிலிருந்து குப்பைகள் ஏற்றி சென்ற டெக்டர் எனவும் ரேந்தபொல பகுதியில் பெய்து வரும் அதிக மழைக்காரணமாக வீதியை விட்டு விலகி இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கெப்பட்டிபொல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆ.ரமேஷ்










