விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

பஸ்ஸொன்றும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
19 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஆட்டோவில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.

இரத்தினபுரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலா செல்வதற்காக பயணித்த பஸ்சுடன் முச்சக்கரவண்டி மோதியதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles