ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிட்டவுள்ளது. பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா உட்பட இலங்கைக்கு கடன் செலுத்துனர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். இது சம்பந்தமாக 26 மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளவுள்ளது.
எனவே, நிதி ஒதுக்கத்துடன், சிறந்த திட்டங்களுடன் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டியுள்ளது.” – என்றார்.