பொன்சேகா வெளியேறினால் மகிழ்ச்சி!

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வெளியேறுவதால் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை. மாறாக வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வெளியேறுவதால் கட்சிக்குரிய வாக்குகள் குறையபோவதில்லை. மாறாக வாக்கு வங்கி அதிகரிக்கும் .

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டதால்தான் பொன்சேகாவுக்கு அதிகூடிய விருப்பு வாக்குகளை கம்பஹா மாவட்டத்தில் பெற முடிந்தது. கட்சியை விட்டு அவர் தனித்து களமிறங்கினால் அவருக்கு வாக்குகள் கிடைக்கப்போவதில்லை.

அதேவேளை, ஜனாதிபதி அழைப்பு விடுத்தால்கூட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அரசுடன் இணையப்போவதில்லை. இது உறுதி. சஜித், ரணில் சங்கமமும் சாத்தியமற்றதொன்றாகும்.” – என்றார்.

Related Articles

Latest Articles