கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை குறுப் பகுதியில் கொரேனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் நேற்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து 25 வயதுடைய குறித்த நபர் பொக்கொல்லயிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன.
கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தொழில் செய்த அவர், கடந்த 11 ஆம் திகதி ஊருக்கு வந்துள்ளார். கொழும்பில் இருந்து வந்தவர் என்பதால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டார். 20 ஆம் திகதி அவரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் நேற்று (23) வெளியான நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.










