ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவுக்கே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவளிக்க வேண்டுமென அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அணியினர், கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தால் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடையாளத்துக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மொட்டு சின்னத்தின்கீழ் போட்டியிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாரில்லை என்பதால், தம்மிக்க பெரேராவே பொருத்தமானவர் எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்கு மொட்டு கட்சியின் அரசியல் உயர்பீடக்கூட்டம் விரைவில் கூடவுள்ளது என தெரியவருகின்றது.