சர்வதேச ரி – 20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
“ இதுவே என்னுடைய இறுதி போட்டி. ஓய்வு பெற இதனை விட மிக சிறந்த தருணம் இல்லை. கோப்பையை வெல்ல வேண்டும் என்று மிக அதிகம் விரும்பினேன். அதனை வார்த்தைகளால் கூறுவது மிக கடினம்.” ஏன்று கூறினார்.
தொடர்ந்து அவர், இதுவே நான் விரும்பியது. அது நடந்து விட்டது. என்னுடைய வாழ்க்கையில் இது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் இருந்தேன். இந்த முறை அதனை நாங்கள் கடந்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி எனவும் ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
ரி – 20 போட்டிகளில் ரோகித் 159 போட்டிகளில் விளையாடி 4,231 ரன்கள் சேர்த்திருக்கிறார். இவற்றில் 5 சதம் மற்றும் 32 அரை சதங்களும் அடங்கும். அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்.
விராட் கோஹ்லி ஓய்வு முடிவை அறிவித்த சில மணிநேரத்தில், அவருடைய நீண்டகால சக வீரரான ரோகித்தும் ஓய்வு முடிவு பற்றி தெரிவித்து உள்ளார்.