தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையே சம்பந்தனுக்கு ஆற்றும் நன்றிக்கடன்!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைமை தாங்கி வழிநடத்தி வந்த இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பிளவி லும், தனது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிக்கல்களி லும் அண்மைக்காலங்களில் மனம் நொந்திருந்தார். அந்தவகையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒன்றுமையும் ஒருமிப்பும் ஒருங்கிணைந்த தமிழ்த் தேசியப் பயணமுமே நாம் அவருக்குச் செய்யும் இறுதிக் கடனாகும்.”

– இவ்வாறு தமிழ் மறைந்த தலைவர் சம்பந்தனுக்கு இரங்கல் தெரிவித்து விடுத்த செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

‘இரா.சம்பந்தனின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்’ – என்ற தலைப் பில் அவர் நேற்று விடுத்த அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:-

“தமிழ் மக்களால் தமிழ்த் தேசியப் பெருந்தலைவராகப் பார்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங் கைத் தமிழரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா ஜவரோதயம் சம்பந்தனின் மறைவுக்கு தமிழ் சிவசிதம்பரம் போன்ற மறைந்த அரசியல்வாதிகள் வரிசையில் சம்பந்தனும் இணைந்து கொண்டுள்ளார்.

1977 களில் தன்னை நாடாளுமன்ற அரசியலுக்குள் நுழைத்துக் கொண்ட சம்பந்தன் 1983 ஜூலைக் கலவரத் துக்கு எதிர்ப்பு வெளியிட்டும், இலங்கை அரசமைப்பின் 6ஆம் திருத்தத் துக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் எதிர்ப்பை வெளிக்காட்டியமையால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தார். இருந்தாலும் அதன் பின்னரான 18 வருடகாலங்கள் நாடாளு மன்ற அரசியலுக்கு வெளியில் இருந் திருந்த போதிலும் 2001ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நாடாளுமன்றப் பிரதி நிதித்துவத்தைத் தக்கவைத்திருந் தார். அது தமிழ் மக்களுக்கான அவரு டைய அரசியல் பணிக்குக் கிடைத்த வெகு மதியாகும்.

2009 இற்குப் பிறகு தமிழ் மக்களின் உரிமைப் பேராட்டத்துக்குத் தலைமை தாங்கியது மட்டுமல்ல ஒருமித்த, பிரிக்கப்படாத நாட்டுக்குள் பல விமர்சனங் களுக்கும் பலரது வேறுவிதமான விருப் பங்களுக்கு மத்தியிலும் தமிழ் மக்களது பிரச்சினைக்கு ஒரு சமரஷ்டி முறையி லான தீர்வைக் கொண்டுவருவதற்கு அவர் முயற்சித்தார்.அவ்வேளைகளில் மாறி மாறி வந்த அரசுத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டவர்.

அதே நேரத்தில் முஸ்லிம் மக்களையும், அவர்களது பிரச்சினைகளையும் சமாந்தர மாக அணுகுவதிலும் பின்நிற்கவில்லை. அதனால் தமிழ் மக்களிடமும் தமிழ் அரசி யல்வாதிகளாலும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் உரி மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக தொடர்ச்சியாகப் பாடுபட்டவரான இரா. சம்பந்தன், வெளிநாட்டுத் தூதுவர்கள், உலக நாடுகளின் தலைவர்களாலும் மரியாதையுடன் பார்க்கப்பட்டவராக இருந்தார். சர்வதேச இராஜதந்திர மட்டத் திலும், பெரும்பான்மை அரசியல் தலை வர்களிடமும் தமிழ் மக்களுடைய விட யங்களை எடுத்தியம்பும் வகையில் தன் னுடைய அரசியலைத் தொடர்ந்து வந்தி ருந்த அவர் இறுதி நேரத்திலும் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதில் ஜனநாயக வழிமுறையில் முழுமூச்சாக 2015ஆம் ஆண்டு அமைந்த நல்லாட்சி அரச காலத்தில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த வேளை யில் அரசமைப்பு மாற்றத்துக்காகப் பாடு பட்டிருந்தார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழிமுறைகளில் இடைவி டாது அரசியல் ரீதியாகச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்த னின் மறைவு தமிழ் மக்களின் அரசி யல் பயணத்தில் ஓர் பேரிழப்பாகும்.

2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைமை தாங்கி வழிநடத்தி வந்த இரா. சம்பந்தன் கூட்டமைப்பின் பிளவிலும், தனது இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் சிக்கல்களிலும் அண்மைக்காலங் களில் மனம் நொந்திருந்தார். அந்த வகையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஒன்றுமையும் ஒருமிப்பும் ஒருங்கிணைந்த தமிழ்த் தேசியப் பயண முமே நாம் அவருக்குச் செய்யும் இறுதிக் கடனாகும். ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியை இழந்து துயருறும் தமிழ் மக்கள், அவரு டைய குடும்பத்தார், அவருடைய கட்சியி னர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங் கல்களைத் தெரிவித்துக்கொள்கின் றோம்.” – என்றுள்ளது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles