ஹைதராபாத் அபார வெற்றி: தோற்றாலும் முதலிடத்தை உறுதி செய்த ஆர்சிபி

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றிரவு நடைபெற்ற 67-வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்கள் என்ற இமாலய ஸ்கோரைக் குவித்தது ஹைதராபாத்.

அணியின் ஆரம்ப வீரர் அபிஷேக் சர்மா 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசி அதிரடி தொடக்கம் தந்தார்.

தொடர்ந்து மிரட்டிய இஷான் கிஷன் 46 பந்துகளில் 79 ஓட்டங்களும், ஹென்ரிச் கிளாசன் 24 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்களும் குவித்து அசத்தினர்.

256 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கைத் விரட்டிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்த போதிலும், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதற்கான தகுதி இலக்கான 166 ரன்களைக் கடந்ததால், நிகர ரன் ரேட் அடிப்படையில் அதிகாரபூர்வமாக முதலிடத்தை உறுதி செய்து குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடிக்க, ஹைதராபாத் அணி இந்தப் பெரிய வெற்றியைப் பெற்றும் ரன் ரேட் பற்றாக்குறையால் நூலிழையில் முதல் இரண்டு இடங்களைத் தவறிவிட்டு 3-வது இடத்துடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles