ரைஸ் குக்கரில் சோறு சமைக்க முற்பட்ட தாய் மின்சாரம் தாக்கி பலி!

புத்தளம், மன்னார் வீதி, வேப்பமடு, விழுக்கை எனும் பகுதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி பலியானார்.

பாபு துஷ்யந்தி (வயது 28) என்பவரே மின்சார தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். இன்று புதன்கிழமை (10) அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (09) செவ்வாய்க்கிழமை இரவு புதிதாக வாங்கிய ரைஸ் குக்கரில் சோறு சமைக்க எத்தனிக்கும் தருவாயில் மின்சாரம் தாக்குள்ளாகி உயிரிழந் துள்ளார். புத்தளம் தள வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை (10) காலை புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிசாம் முன்னிலையில் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை உறவினர்க ளிடம் ஒப்படைத்தார்.

Related Articles

Latest Articles