இலங்கை கிரிக்கெட் அணியின் ரி20 போட்டிக்கான தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளார்.
அவரின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைவர் பதவியில் இருந்து ஹசரங்க விலகினாலும் அணியில் தொடர்ந்து நீடிப்பார்.
ரி20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறை வீரருக்கான தரப்பட்டியலில் வனிந்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.