லயன் அறைகளை அப்படியே வைத்து தோட்ட குடியிருப்பு பகுதிகளை கிராமங்களாக மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
பெருந்தோட்ட பகுதிகளை தனி வீடுகளுடன் நவீன கிராமங்களாக மாற்றுவதற்கு நல்லாட்சியின்போது நடவடிக்கை எடுத்திருந்தேன், அவ்வாறான அணுகுமுறையே தொடர வேண்டும் எனவும் திகா வலியுறுத்தினார்.
மாறாக லயன் அறைகளை அப்படியே வைத்துவிட்டு தோட்டங்களை கிராமங்களாக அடையாளப்படுத்த முற்படும் அரசாங்கத்தின் யோசனை ஏற்புடையது அல்ல எனவும் திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
லயன் யுகத்துக்கு முடிவுகட்டப்பட வேண்டும், எமது மக்களுக்கு வீட்டுரிமை மற்றும் காணி உரிமை என்பன கிடைக்கப்பெற வேண்டும், அடுத்த எமது ஆட்சியின்போது அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் திகாம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.