ஜனவரி 10 ஆம் திகதி மலையக தொழிற்சங்க தியாகிகளை நினைவுகூருவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்தார்.
இது தொடர்பான தனிநபர் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஜனவரி 10 ஆம் திகதியை மலையக தொழிற்சங்க தியாகிகள் தினமாக இந்த அரசு அறிவிக்காவிட்டால், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அதற்குரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்குகின்றேன்.” – எனவும் புத்திக்க பத்திரண குறிப்பிட்டுள்ளார்.










