ஐரோப்பிய கிண்ணத்தை வென்றது ஸ்பெயின்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியனானது.

17ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனியில் கடந்த மாதம 14 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் நிறைவடைந்தது.

24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ஒலிம்பியா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 3 முறை சாம்பியனான ஸ்பெயின் அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது.

ஸ்பெயின் தரப்பில் நிகோ வில்லியம்ஸ் மற்றும் மைக்கேல் ஒயர்சபால் தலா 1 கோல் அடித்தனர். ஆனால் இங்கிலாந்து தரப்பில் கோல் பால்மர் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

 

Related Articles

Latest Articles