நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் இபோச பஸ் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (24) காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நானுஓயாவில் இருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தினுள் வீதியினை கடக்க முற்பட்ட (72) வயதுடைய பாதசாரி ஒருவர் மீது மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, படுகாயமடைந்த நபர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பஸ் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.