ஜனாதிபதி தேர்தலில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
“ விஜயதாச ராஜபக்ச சுதந்திரக்கட்சி உறுப்பினர்தான், அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன். நாட்டுக்காக துணிந்து செயற்படும் அரசியல்வாதியே அவர்.” – எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.