ஜனாதிபதி தேர்தலால் 3 அணிகளாக பிரிந்த சுதந்திரக் கட்சி!

மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது ஜனாதிபதி தேர்தலிலும் மூன்று வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கின்றது.

இதன்படி ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நாளை மறுதினம் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணி, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையிலான அணியினர், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக களமிறங்கவுள்ளனர்.

Related Articles

Latest Articles