மாணவன்மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் ! நீதிகோரி மக்கள் போராட்டம்!!

இரத்தினபுரி, நிவித்திகல இ/நிரியெல்ல தமிழ் வித்தியாலயத்தில் சாதாரண தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர் மீது பாடசாலை நேரத்தில், தோட்ட கள அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட மக்கள் இன்று (30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தோட்ட இளைஞர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் தொலைபேசி வாயிலாக தெரிவித்ததையடுத்து, பாடசாலைக்கு ரூபன் பெருமாள் சென்றிருந்தார்.

நீதிகோரி பாடசாலைக்கு முன்பாக திரண்டிருந்த க்களுடன் கலந்துரையாடியதுடன் இவ் விடயம் தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, குறித்த தோட்ட உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி தோட்ட அதிகாரிக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நிவிதிகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததுடன்,

நிவித்திகல பிரதேச வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாக்குதலுக்குள்ளான மாணவனை சந்தித்து நலம் விசாரித்ததாகவும் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles