ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு வடக்கு, கிழக்கு மக்கள் வந்துவிட்டனர். அவர்களின் நம்பிக்கையை வென்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். அதேபோல மலையக மக்களின் பேராதரவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. – என்று அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கப்பெறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் உரிமை அதற்கான முயற்சியில் ஈடுபடும் தரப்புகளுக்கு உள்ளன. ஆனால் அந்த கோரிக்கை இன்னும் பேச்சு மட்டத்திலேயே உள்ளன, இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றே அறியமுடிகின்றது.
எது எப்படி இருந்தாலும் வடக்கு, கிழக்கு நிலைவரம் ஜனாதிபதி ரணிலுக்கு சாதகமாக உள்ளது. அவர் தலைமையிலான அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டம்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
தெற்கில் பாடசாலைகள்மூடப்பட்டாலும் வடக்கில் மூடப்படுவதில்லை. மாறாக அதிகம் வேலை செய்யுமாறுகோரியே மக்கள் போராடுகின்றனர்.
அங்குள்ள மக்கள் நேர் சிந்தனையில் உள்ளனர்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவும் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என நம்புகின்றோம். அதற்கான நடவடிக்கை உரிய நேரத்தில் இடம்பெறும். ஆதரவு கோரி கடிதம் அனுப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரம் வழங்குவோம், நாட்டை பிரிப்போம் என்றெல்லாம் நாம் கூறி ஆதரவு பெறவில்லை. பொலிஸ் அதிகாரம் அற்ற 13 மற்றும் நல்லிணக்கமே எமது இலக்கும். மாறாக வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் கூறுவதில்லை.” – என்றார்.
