ஒலிம்பிக் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையர்!

ஒலிம்பிக் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையராக அருண தர்ஷன பதிவாகியுள்ளார்.

ஒலிம்பிக் விழாவொன்றில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அரைஇறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இலங்கையர் எனும் மைல்கல் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.பாரிஸ் ஒலிம்பிக் விழாவில் அவர் இந்த மகத்தான ஆற்றலை வௌிப்படுத்தினார்.

ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் முதல் சுற்றுப் போட்டியில் அருண தர்ஷன மூன்றாமிடத்தைப் பிடித்தார்.

போட்டியைப் பூர்த்தி செய்ய அவருக்கு 44.99 செக்கன்கள் சென்றதுடன் இதன் மூலம் அரைஇறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இது 400 மீற்றர் ஓட்டத்தில் அவரது அதிசிறந்த காலப்பெறுதியாகும்.

அருண தர்ஷன பங்கேற்கும் 400 மீற்றர் அரைஇறுதிப் போட்டி இலங்கை நேரப்படி நாளை(06) இரவு 11.05 அளவில் நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles