பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதலின் போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை காவல் துறையினர் தெரிவித்தனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட 2 பேர், போதைப்பொருள் வியாபாரம் , திருட்டுச் சம்பவம் மற்றும் பல குற்றச்சாட்டுக்கள் உடன் தொடர்புடைய 13 பேர் உட்பட 15 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் அதிகமானோர் இளைஞர்கள் என்று பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த உள்ளதாக பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
எம்.எப்.எம். அலி
