போராட்டக்காரர்களுக்காகவே நாமலை களமிறக்கினோம்!

அறகலய காரர்கள் இளம் தலைவரையே கோரினார்கள், அந்த இளம் தலைவரை நாம் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கியுள்ளோம் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாமல் ராஜபக்ச பலமான வேட்பாளர், எனது அரசியல் அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு சொல்கின்றேன், தேர்தலில் அவர் நிச்சயம் வெற்றிபெறுவார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து சென்றவர்களை மீள வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அறகலய காரர்கள் இளம் தலைவர்களைக் கோரினர், அந்த தலைவரை நாம் வழங்கியுள்ளோம், எனவே, இளைஞர்கள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles