உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பந்துல லால் பண்டாரிகொடவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரைத்துள்ளது.
விருப்பு வாக்கு பட்டியலில் அவரே அடுத்த இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன், வெற்றிடமாகியுள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மும்முனை போட்டி நிலவுகின்றது.
சுஜீவ சேனசிங்க, அஜித் பீ பெரோ மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகிய மூவருக்கிடையில் போட்டி நிலவுகின்றது என தெரியவருகின்றது.
ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோரை கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த சட்டரீதியானது என உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
தம்மை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவு சட்டவிரோதமானது எனவும், அந்த தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறுகோரி ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான விசாரணையிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.










