ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளது என்று இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்துக்கொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ எதிர்வரும் 18ஆம் திகதி கொட்டகலை சி.எல்.எப். வாளாகத்தில் கூடவுள்ள தேசிய சபையினூடாக 2024ஆம் ஆண்டின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.” – எனவும் அவர் கூறினார்.