செயற்கைக்கோள் ஊடாக இணைய வசதி வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு இணையத்தை அறிமுகப்படுத்தியதைப் போன்றே, தற்போது அதிவேக இணைய சேவையையும் இலங்கைக்குக் கொண்டுவந்துள்ளார். இதனால் அனைவரும் இனி உலகோடு இன்னும் வேகமாக தொடர்புகொள்ள முடியும்.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்குவதற்கான அனுமதியை ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இது தேசத்தில் இணைய புரட்சியை ஏற்படுத்தும். இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் அமையும். இதன் அதிவேக இணைய சேவை மூலம் இன்றைய டிஜிட்டல் காலத்தில் கல்வி சார்ந்த முன்னேற்றங்களை அடைவார்கள்.

ஸ்டார்லிங்க் அறிமுகம் இலங்கை மக்களுக்கு பெரிதும் உதவும். பேரிடர் காலங்களிலும் பயன்படுத்த முடியும். தொலை தூரங்களில் இணைய தொடர்பு இல்லாமல் இருப்பவர்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு ‘தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்’ அனுமதித் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதிப் பத்திரம், 2024 ஆகஸ்ட் 12 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலகப் புகழ்பெற்ற வர்த்தகர் எலான் மஸ்க்கிற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இந்தோனேசியாவில் நடைபெற்றது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் வலையமைப்புடன் இலங்கையை இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதன் விளைவாக, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையில் இணைய வசதி சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழிநுட்ப இணைய சேவையை விட இந்த இணைய சேவையானது பல மடங்கு வேகமானது என்பதனால் உலகில் எந்த இடத்திலிருந்தும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் தொழில்நுட்பத் துறையில் சிறந்த சூழல் உருவாகும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles