தாவும் தவளை அரசியலுக்கு முடிவு கட்டுவோம்!

கட்சி தாவும் தவளை அரசியலுக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் முடிவுகட்டப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“ இந்த பக்கம், அந்த பக்கம் என கட்சி தாவல்கள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. இப்படியான தவளை அரசியலை நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். எனவே, தவளை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.

எமது நாட்டுக்கு கொள்கை அடிப்படையிலான அரசியலே தேவைப்படுகின்றது. அந்த வழியிலேயே எமது அணி பயணிக்கின்றது. தாவும் அரசியல் தவளைகளுக்கு எமது அணியில் இடமில்லை.

இவ்வாறு தாவும் தவளைகள் இணைந்து கூட்டணிகள் அமைத்திருந்தாலும் அவை எமக்கு சவாலாக அமையாது.  கட்சி தாவினால் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வதற்குரிய சட்டம் இயற்றப்படும். தற்போது அச்சட்டம் இருந்தாலும் அதனை பலப்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படும். அசிங்கமான அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டப்படும்.’’ – என்றார்.

Related Articles

Latest Articles