ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் ரங்கா வருவதற்கு, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கடும் எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்தே யாழில் களமிறங்கியுள்ளார்.
இதன்படி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வடக்கு மாகாண இணைப்பாளர் உமா சந்திரா பிரகாசுடன் இணைந்து சஜித் பிரேமதாசவிற்கான பிரசாரப் பணிகளில் ஸ்ரீ ரங்கா ஈடுபட்டுள்ளதாக யாழ் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேர்தல் முடிந்தபின்னர் கொழும்பிற்கு வந்து சஜித் பிரேமதாசவுடன் கட்சிப் பணிகளை முன்னெடுக்க அவர் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அத்துடன், வடக்கில் உமா சந்திரபிரகாஷ் யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவிற்கான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், ரங்காவின் பிரசன்னம் அவரது வேகத்தைக் குறைத்துள்ளதாகவும் அந்தச் செய்தியாளர் தெரிவித்தார்.
