தான் கட்சி பதவியை இராஜினாமா செய்யவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்று அறிவித்தார்.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை நான் இன்னும் இராஜினாமா செய்யவில்லை. பதவியை துறக்குமாறு ஜனாதிபதி என்னை வற்புறுத்தவும் இல்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பணத்துக்காக நான் விலைபோய்விட்டதாக சிலர் தகவல்களை வெளியிடுகின்றனர். அவற்றை நான் நிராகரிக்கின்றேன்.இவற்றுக்கு உரிய வகையில் பதில் வழங்கப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி பொதுச்செயலாளர் பதவியை துறந்தால்கூட நான் ஐக்கிய தேசியக் கட்சி காரர் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.” – என்றார்.










