எரிபொருள் விலை குறைப்பு!

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலை 332 ரூபாவாகும்.

95 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், மண்ணெண்ணெய் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles