வழி தவறிய மான் குட்டியை காப்பாற்றிய வளர்ப்பு நாய்! புளியாவத்தையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

பொகவந்தலாவ, புளியாவத்தை நகரத்தில் வழித்தவறி நாய்களால் துரத்தி தாக்கப்பட்டு சிக்கித்தவித்த மான்குட்டியொன்றை வளர்ப்பு நாயொன்று காப்பாற்றியுள்ள நெகிழச்சி சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்தவளர்ப்பு நாய், அதன் உரிமையாளருக்கு சைகை காண்பித்து மான் குட்டி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.

இதனையடுத்து உரிமையாளரும் , பிரதேச இளைஞர்களும் இணைந்து மான் குட்டியை மீட்டு, நீர் வழங்கி – நல்லத்தண்ணி வன விலங்கு அதிகாரிகளுக்கு தகவலை வழங்கி, மான் குட்டியை ஒப்படைத்தனர்.

தகவல் – S.Suganthan(BSc) SEUSL JP

Related Articles

Latest Articles