மஸ்கெலியா,மவுசாகல லக்கம் பிரிவில், சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கியுள்ளது.
லக்கம் பிரிவில் உள்ள விளையாட்டு திடல் பகுதியிலேயே நேற்றிரவு குறித்த சிறுத்தை சிக்கியுள்ளது.
சிறுத்தையொன்று வலையில் சிக்கி இருப்பதைக் கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்