எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.
எனினும், இன்று வவுனியாவில் கூடிய கூட்டம் கட்சியின் யாப்பிற்கு முரணானது எனவும், சட்டவிரோதமானது எனவும் அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அறிவிப்பு உத்தியோகபூர்வமானதல்ல என்றும் இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இன்றைய மத்தியக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரான ஸ்ரீதரன் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
