ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது என்று வெளியாகியுள்ள தக வல், கட்சியின் முடிவல்ல என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக் கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தீர்மா னித்துள்ளது என்று வவுனியாவில் நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது கட்சியின் முடிவல்ல என்றும், இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு என்றும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுகயீனம் காரணமாக நேற்று வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. நான் கட்சியின் தலைவர். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் துக்கு ஆதரவான தீர்மானம் தொடர் பில் என்னுடன் எவரும் கலந்தாலோசிக்க வில்லை. இது தொடர்பில் எனக்கு எது வும் தெரியாது. கட்சியின் இந்த நிலைப்பாடு தொடர் பில் இதுவரை எனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை.
எனவே, சஜித்துக்கு ஆதரவான தீர்மானம் தமிழரசுக் கட்சியின் உத்தி யோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக் கொள்ள முடியாது. இது கட்சியின் முடிவல்ல. இது ஒரு சிலரின் தனிப்பட்ட முடிவு.” – என்றார்.
தமிழரசுக் கட்சியின் நேற்றைய மத் திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான யாழ்ப்பாணம் – கிளி நொச்சி மாவட் ட நாடாளுமன்ற உறுப் பினர் சிவஞானம் சிறீதரன், மன்னார் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் பங்கேற்க வில்லை.
இருவரும் இலண்டனில் தங்கி நிற்கின்றனர். மேலும், கட்சியின் முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர்களான சீனித் தம்பி யோகேஸ்வரன், ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும் கலந்துகொள்ள வில்லை.










