தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த ஆறு பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்ட பகுதியிலேயே இன்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் எனவும், ஏனைய நால்வரும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மஸ்கெலியா நிருபர்.
