இலங்கை அரசியலில் புதிய திசையை உருவாக்கும் நோக்கில், பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உதயமானது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.
கூட்டணியின் தலைவராக பிரதமரும், செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரணவும் செயற்படவுள்ளனர்.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் திஸ்ஸ யாப்பா ஜயவர்தன, ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் அமைச்சர் டிரான் அலஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன், தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் அரவிந்த குமார், தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் அசாத் சாலி, தேசப்பற்றுள்ள மக்கள் சக்தி சார்பில் சுகத் ஹேவாவிதாரண ஆகியோர் புதிய அரசியல் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.