22 ஆம் திகதி ஜனாதிபதியாக ரணில் மீண்டும் பதவியேற்பு!

“ அஸ்வசும கொடுப்பனவை மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நடவடிக்கை எடுத்தார்.” – என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ மலையக பெருந்தோட்ட மக்கள் கடந்த காலங்களில் ஓரங்கப்பட்டும் நிலை இருந்தது. குறிப்பாக நிவாரண கொடுப்பனவுகளின் போது, ஏதோ ஒரு காரணம் காட்டி தோட்ட மக்கள் தட்டி கழிக்கப்படுகின்றனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஸ்வசும கொடுப்பனவை மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல் ரணில் விக்ரமசிங்க, பிரதமராக இருந்த அரசாங்கத்திலேயே மலையக மக்களுக்கு அதிகபட்சமான வேலைகள் நடைப்பெற்றன.

தனி வீட்டு திட்டத்துடனான புதிய கிராமங்கள், நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் அதிகரிப்பு மற்றும் பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு என பல விடயங்களை கூறிக்கொண்டு போக முடியும். எதிர்வரும் 22 ஆம் திகதி எமது நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பது உறுதி.

அதன் பின்னர் அன்று நாம் நிறுத்திய வேலை திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து முன்கொண்டு செல்ல முடியும். எனவே நாட்டுக்கும் நமக்கும் வெற்றி கிட்டும் வழி ரணிலின் வழியே ஆகும்.” – எனவும் வேலுகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.

 

Related Articles

Latest Articles