ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரது சேவை நாட்டுக்கு தேவை – என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
காலியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நாட்டின் பொருளாதாரம் தற்போது மீண்டு வருகிறது. நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா என மக்களிடம் கேட்கிறேன். மாற்றம் தேவை என்கிறார்கள். பங்களாதேஷத்தில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் ஷேக் ஹசீனா துரத்தப்பட்டார்.
நாட்டை முன்னேற்றிய தலைவி போராளிகளால் விரட்டப்பட்டார்.
இன்று பங்கதேஷில் 19 மணி நேர மின்வெட்டு அமுலில் உள்ளது. இந்த நாட்டிற்கும் அப்படியொரு மாற்றம் தேவையா என்று கேட்கிறேன். எனவே இந்த தேர்தலில் சரியான முடிவை எடுங்கள். இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறது.
மாற்றத்தை ஏற்படுத்திய பிறகு, உலகின் ஏனைய நாடுகள் இருந்த இடத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு சென்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
அவரது சேவை நாட்டுக்கு தேவை. ஜனாதிபதியினால் இரண்டு வருடங்களுக்குள் இலங்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.










