நாட்டில் ஊடரங்கு சட்டம் அமுல்!

இன்றிரவு(21) 10 மணி முதல் நாளை(22) காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் தமது வீடுகளிலேயே இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவு வௌியாகும் வரையில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

63,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் கிடைத்த தகவல்களுக்கமைய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகாமல் தேர்தல் மிக அமைதியாக நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

வாக்கெண்ணும் பணிகள், தேர்தல் முடிவுகள் வௌியாகும் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

Related Articles

Latest Articles