இலங்கை மற்றும் சுற்றுலா நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி இப்போட்டி ஆரம்பமானது.
இலங்கை அணி தனது முதல் இரு இன்னிங்ஸ்களில் 305, 309 ஓட்டங்களை பெற்றது.
இதில் முதல் இன்னிங்ஸிற்காக ஆகக் கூடுதலாக, கமிந்து மெண்டிஸ் 114 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து சார்பில் வில்லியம் ஓ ரோர்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாம் இன்னிங்ஸிற்காக ஆகக் கூடுதலாக, திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து சார்பில் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 340 ஓட்டங்களை பெற்றது.
ஆகக் கூடுதலாக டொம் லதம் 70 ஓட்டங்களையும், டெரில் மிச்சல் 57 ஓட்டங்களையும், கேல் வில்லியம்சன் 55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாம் இன்னிங்ஸிற்காக 274 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 211 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அவ்வணி சார்பில் ரச்சின் ரவீந்திர 92 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை சார்பில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரே போட்டியின் நாயகனாகவும் தெரிவானார்.