தனது 18 மாத பெண் குழந்தையை தாயொருவர் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் கலஹா, கஸ்தூரி லேண்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
லக்ஷிகா என்ற 21 வயது இளம் தாயொருவரே இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.அவரை கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குழந்தையை தாக்கியும், மூச்சடைக்க வைத்துமே கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. இவற்றை தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அருகில் உள்ளவர்கள் வீட்டுக்கு வந்தவேளை குழந்தை தரையில் கடப்பதைக்கண்டு நேற்றிரவு 10.20 மணியளவில் கலஹா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தை ஏற்கனவே இறந்துள்ளது என்பதை அறிந்த வைத்தியர்கள், அது தொடர்பில் கலஹா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஹெரணை பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றிவருகின்றார்.