30 ஆம் திகதிக்கு முன் O/L பரீட்சை பெறுபேறு வெளியாகும்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபெறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் , 65,331 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles