புதிய அமைச்சர்களுக்கு ஜீவன் வாழ்த்து!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி திருமதி. ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நீங்கள் இந்த பிரதமர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். சமூக நீதிக்கான உங்கள் போற்றத்தக்க பணி, குறிப்பாக ஒதுக்கப்பட்ட அனைவருக்கும் மற்றும் உங்கள் இரக்கமுள்ள தலைமை, கண்ணுக்கு தெரியாத வாழ்க்கை வாழ்ந்த நம் நாட்டில் பலருக்கு குரல் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு ஆகிய இரண்டினையும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் வாழ்த்துகள்.

மேலும் நான் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, நீர்வளத்துறையை சீர்திருத்துவதற்கும், இலங்கையின் சமூக பொருளாதார கட்டமைப்பிற்காக பெருந்தோட்ட சமூகத்தை முழுமையாக ஒருங்கிணைப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்ட பணிகளை முன்னெடுப்பீர்கள் என நம்புகிறேன்.” – எனவும் ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles