தீ விபத்தில் நுவரெலியாவில் வீடு தீக்கிரை

நுவரெலியா பொரலாந்த வஜிரபுற பிரதேசத்தில் உள்ள தனி வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த தீ விபத்தானது (26) அதிகாலையில் ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் .

வீடு திடீரென தீப்பிடித்து எரிவதனை அவதானித்த அயலவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதிலும் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும், முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

தீ விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் தீ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரினால் இக்குடும்பத்தை தற்காலிகமாக தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் தடயவியல் விசாரணைகளை முன்னெடுத்த் போது வீட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ பற்றியுள்ளதாக உறுதி செய்தனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related Articles

Latest Articles