அரசியல் களத்தில் அடுத்து என்ன? விசேட தொகுப்பு

🛑 அநுர அலைக்கு அணைபோட எதிரணிகள் வியூகம் வகுப்பு: கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கிடையில் பேச்சுகள் முன்னெடுப்பு. பச்சைக்கொடி காட்டுவதில் சஜித் அணி சற்று இழுத்தடிப்பு.

🛑 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பிக்கள், முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூட்டணி அமைப்பதற்குரிய நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பில் நாளை இறுதி முடிவு எட்டப்படவுள்ளது.

🛑 நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை – முக்கியத்துவம் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களிலும் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர்.

🛑 பொதுத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பலமான அணியை களமிறக்கவுள்ள தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவு ஏற்பட்ட மாவட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

🛑 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொதுத்தேர்தலில் களமிறங்காமல் இருப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் சிலர் செயற்பாட்டு அரசியலுக்கு விடைகொடுக்கவுள்ளனர்.

🛑 ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலும் பொது கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் மந்திராலோசனை நடத்தப்பட்டுவருகின்றது.

🛑 களுத்துறை மாவட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகள் உள்ளன. தமிழ் மக்களும் வாழ்கின்றனர். முஸ்லிம் சகோதரர்களும் உள்ளனர். களுத்துறை மாவட்டத்துக்கு இம்முறை ஆசனமொன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, களுத்துறை மாவட்டத்திலிருந்து தமிழ் பேசும் பிரதிநிதியொருவரை சபைக்கு தெரிவுசெய்வதற்குரிய வாய்ப்பு உதயமாகியுள்ளது.

🛑 கொழும்பு, கண்டி மாவட்டங்களில் தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பது தொடர்பிலும், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலிருந்து தமிழ் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பது தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டுவருகின்றது.

Related Articles

Latest Articles