“எமது மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும், எனவே, ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பொன்றின்போது அவரிடம் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
“எமக்கு அழைப்பு விடுத்தால் அது தொடர்பில் கட்சியாக தமிழ் முற்போக்கு கூட்டணி பரிசீலிக்கும். நாம் அழைப்பை ஏற்க விரும்பம் எனக் கூறவில்லை. ஆனால் பரிசீலிக்க முடியும்.
மக்களுக்காக வரப்பிரசாதங்களை துறப்பதற்கு நான் தயார். எனக்கு வாழ்வதற்குரிய வருமான வழி உள்ளது. எனவே, அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைளைத் துறப்பதற்கு தயார்.” – எனவும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
