கொழும்பு ,வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிக்கல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலையிலேயே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் 32 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவருகின்றது.
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
